• Dec 26 2024

'வாழை' படம் சிறுகதையில் இருந்து சுட்ட கதையா? சொந்தம் கொண்டாடி சர்ச்சையை கிளப்பிய எழுத்தாளர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த 23ஆம் தேதி வெளியான தமிழ் திரைப்படங்களில் வாழை திரைப்படமும் ஒன்றாக காணப்படுகிறது. இந்த படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியானது. தற்போது வரையில் இந்த திரைப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மாரியின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படம்  எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்த இயக்குனர்கள் முதல் பொதுமக்கள் ரசிகர்கள், நடிகர்கள் என பலரும் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அழுத காட்சிகளும் இணையத்தில் வைரலாக இருந்தது.

வாழை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறி உள்ளது. இந்த படத்திற்கு ஹவுஸ்புல் காட்சிகள் தற்போது வரையில் ரசிகர்களின் ஆதரவால் பெருகி வருகின்றது. இந்த படம் தமது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் படத்தை பார்த்த ரசிகர்கள் தமது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றார்கள்.

இவ்வாறு பலரது பாராட்டைப் பெற்ற வாழை படத்தின் கதை தான் எழுதிய சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் தற்போது பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், நான் அதிகமாக சினிமா பார்ப்பதில்லை. எப்போதாவது தான் பார்ப்பேன். வாழைப்படம் பார்த்த எனது நண்பர்கள் சிறுகதையை போல் உள்ளதாக தெரிவித்தார்கள். அதன் பிறகு வாழைப் படத்தை பார்த்தேன். 10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கதைக்கு 'வாழையடி..' என பெயர் வைத்தேன். 

அதற்குக் காரணம் சிறுவர்கள் பல தலைமுறைகளாக இந்த வேலையை செய்து வருகின்றார்கள் என்பதை குறிப்பதற்காகத்தான். நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை தான் இப்போது காட்சி ஊடகமாக மாற்றி எடுத்து உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

தற்போது பிரபல எழுத்தாளர் இவ்வாறு கூறிய நிலையில் இதற்கு மாரி செல்வராஜ் என்ன பதில் கூறப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement