• Dec 25 2024

பிக் பாஸில் கண்டிப்பா பணப்பெட்டி இவருக்கு தான்? வெளியான நாமினேஷன் முடிவுகள்? கேள்விக்குறியான விசித்ரா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்க, இதில் யார் டைட்டில் வின் பண்ணுவார்? யார் பணப்பெட்டி எடுப்பார்? யார் வெளியேறுவார்? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் இனி வரும் நாட்களில் என்னென்ன நடக்கும், யாருக்கு டைட்டில் கிடைக்கும், யார் ரன்னர் ஆகுவார், இடையில் பணப் பெட்டியை எடுக்கப் போவது யாரு என சமூக ஊடக தகவல்களின் அடிப்படையில் அலசலாம் வாங்க. 

அதன்படி, இந்த வாரம் இடம் பெற்ற டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்படுகின்றனர். இதுல யார் வந்து உள்ள வரப் போறாங்க? யார் வெளிய போக போறாங்க என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். 


இந்த டாஸ்க்ல விஷ்ணு உள்ள வாரத்துக்கான வாய்ப்புகள் இல்லை. இதற்குக் காரணம் அவர் ஏற்கனவே பைனல் லிஸ்ட் ஆக  தேவையான பாயிண்ட்ஸ் எல்லாம் எடுத்து விட்டார். அவர் நேரடியாகவே பைனலிஸ்ட் ஆன படியா அவருக்கு இறுதி பைனாலே ஓட்டிங் லிஸ்ட்  வரும் போது தான் அவருடைய ஓட்டும் கணக்கில் எடுக்கப்படும்.

அத்துடன் இந்த இரண்டு வாரத்தில் யார் முதலிடத்தில் இருக்கின்றார்களோ, யார் சேவ் பண்ண படுகிறார்களோ, அவர்கள் தான் டைட்டில் வின்னர் என்பது காலகாலமாகவே நடந்து வருகிறது. இது இதை நாம் கடந்து வந்தஆறு சீசன்களிலும் பார்த்திருப்போம்.


ஆனாலும் இந்த சீசனில் தான் அதிகமாக யாரும் சேவ் பண்ணப்படவில்லை. இதுலயும் ஒரு ட்விஸ்ட்  இருக்கு. இந்த வாரம் யாரையும் சேவ் பண்ண வில்லை என்றால் மாயா கண்டிப்பாக ஃபைனல் லிஸ்ட் செல்வது உறுதி. இதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் டைட்டில் இல்லை என்றால் ரன்னர்  கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.

இவருக்கு போட்டியாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அர்ச்சனா காணப்படுவார்.  இவர்களில் ஒருவருக்கே வின்னர் அல்லது ரன்னர் கிடைக்க அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.


மேலும், மிஞ்சியுள்ள பூர்ணிமா, விசித்திரா, மணி, விஜய் வர்மா ஆகியவர்களில் யார் வேண்டுமென்றாலும் பணப்பெட்டியை எடுக்கலாம் அல்லது வெளியேறலாம் எனவே கணிக்கப்படுகிறது. 

அதன்படி, அர்ச்சனா, மாயா, தினேஷ், மணி, விஷ்ணு ஆகிய இவர்களுக்கு இடையில் தான் அதிகமான போட்டியாக இருக்கும். 

இது தவிர, விசித்ரா, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகியோரில் யாரேனும் பணப் பெட்டியை  எடுத்துச் செல்வார்கள். அப்படி இல்லை என்றால் வெளியேற்றப்படுவார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகுது என்பதை.

Advertisement

Advertisement