• Dec 26 2024

மீண்டும் மீண்டுமா? சிம்பு நடிகையுடன் ரிலேஷன்ஷிப்! உண்மையா? வதந்தியா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு பல சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார். தற்போது தக் லைப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


என்னதான் சினிமாவில் இவர் முன்னணி நடிகராக இருந்தாலும், இதுவரை இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது இவருக்கு வயது 41. இனி எப்போ என்று தான் பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சிம்புவின் பெற்றோர் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணத்திற்காக வரன் தேடி வருகிறார்கள்.


ஆனால் தற்போது சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வால் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும். இவர்களுக்கு திருமணம் நடக்க போவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை பற்றி, இதுவரை இவர்கள் வெளிப்படையாக பேசவில்லை. விரைவில் இது தொடர்பாக சிம்பு தரப்பினர் அல்லது நிதி அகர்வால் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement