• Dec 26 2024

மறைந்த நடிகரான விவேக் பகலில் விதம் விதமான கண்ணாடி அணிய இப்படியொரு காரணம் இருக்கின்றதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  மனதில் உறுதி வேண்டும் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் விவேக்.முதல் படத்தின் வெற்றி, விவேக்கின் சிறந்த நடிப்பை அடுத்து தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன. இதனால் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ஒரே வருடத்தில் 8லிருந்து 10 படங்கள்வரை நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். 

 தனது நகைச்சுவையில் சமூக கருத்துக்கள், முற்போக்கு கருத்துக்கள் போன்றவைகளை வெளிப்படுத்தக் கூடியவர் தான் இவர்.விவேக்கின் ஸ்டைல் எப்படி ரசிக்கப்பட்டதோ அதேபோல் அவர் அணியும் கூலர்ஸ் கண்ணாடிகளும் வெகுவாக ரசிக்கப்பட்டன. இதனால் இவர் அணியும் கண்ணாடிகளுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது விவேக்கால் இரவில் எவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் கண்ணை திறந்து பார்த்துவிட முடியுமாம். ஆனால் பகலில் வரும் சூரிய வெளிச்சத்தை அவரது கண்களை அகல திறந்து பார்க்க முடியாதாம். அந்த பிரச்சினை அவருக்கு இருந்ததாம். அதனால் அதை சமாளிப்பதற்காக கறுப்பு கண்ணாடியில் பவர் ஏற்றி போட்டுக்கொண்டாராம். 

அதன் காரணமாக அவருக்கு நன்றாக பார்வை தெரியவும் செய்ததாம். இந்தத் தகவலை விவேக் சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


தன்னுடைய வாழ்க்கையில் ஈகோவே இல்லாமல் எல்லோரிடமும் பழங்கிய விவேக் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். அவரது ஒரே ஏக்கம் கமல் ஹாசனுடன் நடிக்கவில்லையே என்பதுதான். அதுவும் இந்தியன் 2 படத்தின் மூலம் நிறைவேறியது. அந்தப் படத்தில் கமிட்டாகி சில காட்சிகள் நடித்தார். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு விவேக் உயிரிழந்தார்.இன்றைய தினம் இவரது 62 பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement