• Jun 14 2026

'கராத்தே பாபு' படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸா? படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்!

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் ரவி மோகன், தற்போது ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் மூலம் புதிய அவதாரத்தில் திரைக்கு வரத் தயாராகி வருகிறார். 

இந்த படத்தில் அவர் அரசியல் பின்னணியிலான சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘டாடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ள இந்த படம், ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் டாவ்டி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேபோல் இயக்குநர் பி. வாசுவின் மகனும் நடிகருமான சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடகி மீனாட்சி இளையராஜா வரிகள் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல், நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல், உணர்வு, மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை இணைக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம், ரவி மோகனின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement