• Dec 26 2024

நிறைமாத கர்ப்பிணி செய்ற வேலையா இது? அமலா பாலுக்கு கண்டிப்புடன் அட்வைஸ்! அதற்கு வீடியோ வேறு..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமானவர் தான் அமலா பால். ஆனாலும் அந்த படம் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து அமலாபால் நடித்த மைனா திரைப்படம் அவரது கேரியரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதை அடுத்து முன்னணி நடிகரான தளபதி விஜய் உடன் தலைவா படத்தில் நடித்திருந்தார். மேலும் வேலையில்லா பட்டதாரி, வேட்டையன், காதலில் சுதப்புவது எப்படி என பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

தலைவா படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முடிவுக்கு வந்தது.


இதைத்தொடர்ந்து சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த அமலாபால், தனது நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாகவும் காணப்படுகிறார்.


இந்த நிலையில், நிறைமாத கர்ப்பமாக காணப்படும் அமலாபால் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட வீடியோக்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அண்மையில் இவருக்கு வளைகாப்பும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என கண்டிப்புடன் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement