• Dec 25 2024

மனோஜுக்கு இப்படி தான் கனடா வேலை கிடைச்சதா? கதறிய விஜயா! அண்ணாமலை செய்த காரியம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,மனோஜ் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்சிக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண போகிறார். அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்க குவாலிபிகேஷன் என்ன என கேட்டு அவர்களை ஓட வைக்கிறார் மனோஜ். இறுதியில் யாருமே போட்டிக்கு இல்லாததால் தனக்கு வேலை கிடைத்துவிடும் என உள்ளே செல்கிறார்.

அவர்களும் மனோஜின் குவாலிபிகேஷனை பார்த்து, நீங்க தான் சரியான ஆள் என சொல்ல, மனோஜ் சந்தோசப்படுகிறார். 

மேலும் வேலை கனடாவில தான்,  ஆனா அதுக்கு சில ப்ராசஸ் இருக்கு. முதல்ல கொஞ்சம் பணம் கட்டணும். அதுவும் 14 லட்சம் என சொல்ல, மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். 


அத்துடன் பணத்தை கட்டிடீங்கனா ஒரு மாசத்துல ப்ராசஸ் எல்லாம் முடிஞ்சிடும் நான்கு, ஐந்து மாசத்துல கட்டின பணத்தையும் எடுத்திடலாம் என சொல்லி அனுப்புகிறார்கள்.

மறுபக்கம் விஜயா, மனோஜ இன்னும் காணல என்று சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்த முத்து வேலை பார்த்துட்டு தானே  இருக்கான், இப்போ எங்க என கேட்க,  அந்த வேலையை விட்டுட்டாரு, ஆனால் கண்டிப்பா இன்னைக்கு வேலையோடு தான் வருவார் என்று  ரோகிணி கூற, அண்ணாமலை அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ், நேரா விஜயாவின் காதில் ஏதோ ரகசியமாக சொல்ல, விஜயா கதறி அழுகிறார். திரும்பவும் எதையோ சொல்ல, கடவுள் இப்படி பண்ணிட்டானே, என இருவரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள்.

எல்லாரும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து என்னாச்சு என கேட்க, இப்பதான் என் அறிவுக்கும் திறமைக்கும்  ஏற்ற மாதிரி கனடாவில் வேலை கிடைச்சிருக்கு என சொல்ல ரோகிணி சந்தோசப்படுகிறார்.

மேலும் லட்ச லட்சமா சம்பளம் எல்லாம் கிடைக்கப்போகுது.  ஆனா அங்க குளிருமே, உன்னால் எப்படி இருக்க முடியும் என விஜயாவும்,  இனி விசா எல்லாம் வாரத்துக்கு ஒரு வாரம் ஆயிடும் என ரோகிணியும் சந்தோஷத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அண்ணாமலை இப்போ வேலை கிடைச்சிடுச்சா? கிடைக்கலையா? என கேட்க, வேலை கன்பார்ம் தான்பா ஆனா 14 லட்சம் கட்டணும்  என சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதற்கு தான் ரெண்டு பேரும் இப்படி டிராமா போட்டிங்களா என முத்து கிண்டல் பண்ணுகிறார்.

இதை அடுத்து விஜயாவும் மனோஜூம் செய்த கூத்தை நினைத்து அண்ணாமலை விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதை பார்த்து முத்து நீ இப்படி சிரிச்சி எவ்வளவு நாளாச்சு, இப்படியே இருக்கணும் பா என  சொல்ல, இனிமே தினமும் கனடா போறான்னு இவங்க ஒரு கூத்த பண்ணுவாங்க அதை பார்த்து நாம சிரிப்போம் என சொல்கிறார் அண்ணாமலை.

இன்னொரு பக்கம் ரவியை பார்க்க ஸ்ருதியின் அம்மா  ஹோட்டலுக்கு சென்று, அவரை வேலை செய்ய விடாமல் பேசிக்கொண்டே இருக்க அடுப்பில் வைத்தது தீய தொடங்கி விட்டது. 

இதையடுத்து, இப்படி வேலை செய்ற இடத்துக்கு வந்து இரிடேட் பண்ணாதீங்க இங்க இருந்து கிளம்புங்க என அவரை ரவி திட்டி அனுப்புகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement