• Sep 17 2026

சூர்யாவை அடுத்த படத்தில் இப்படியா பார்க்கப் போறோம்? ‘சர்தார் 2’ விழாவில் வெளியான தகவல்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மட்டுமின்றி கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தனது தம்பிக்காக சூர்யா நேரில் வந்து விழாவில் பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


மேலும், நிகழ்ச்சியில் சூர்யா பேசிய சில வார்த்தைகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. குறிப்பாக,“நான் சென்னையில் தான் இருக்கேன்.. மும்பைக்கு போயிட்டு போயிட்டுத்தான் வரேன்..” என்று அவர் கூறியதும், அரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரம் எழுந்தது.

தொடர்ந்து ‘சர்தார் 2’ டீசரை தற்செயலாக பார்த்தபோது தான் ஆச்சரியமடைந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். “இப்படியெல்லாம் தமிழில் படம் பண்ண முடியுமா? மித்ரன் படமா அது?” என நினைத்ததாக அவர் கூறியுள்ளார். இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் படைப்பாற்றலை பாராட்டும் விதமாக சூர்யாவின் இந்த கருத்து அமைந்துள்ளது.

இதனிடையே, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் பார்த்த சூர்யாவை விட, அவரது அடுத்த படத்தில் இன்னும் அதிகமான சார்மிங் லுக்கில் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்தி ரசிகர்கள் மட்டுமின்றி சூர்யா ரசிகர்களிடையேயும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement