இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி - நித்யா மேனன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்திற்கானப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நித்யா மேனனின் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகின்றது. அதில் அவர் ரசிகர் ஒருவர் கைகொடுக்க தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கின்றார். ஆனால் அந்த நேரத்தில் அங்கு நடிகர் வினய் வர அவரை கட்டி அணைத்துக் கொள்கின்றார். இந்த சம்பவம் தற்போது இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது
அதாவது காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நித்யாமேனன் அங்கு ஜெயம் ரவி, மிஷ்கின் ஆகியோருடன் கட்டித்தழுவி முத்தமிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இதன் போது இயக்குநர் மிஷ்கின் நித்யா மேனனின் கைகளிலும் நெத்தியிலும் முத்தம் கொடுத்து இருந்தார். அதன் பின்பு சக நடிகர்களுடன் தனது அன்பை பகிரும் வகையில் நித்யா மேனன் நடந்து கொண்ட வீடியோக்களும் வைரலாகி இருந்தன.
இவ்வாறான நிலையில் நித்யா மேனனுக்கு ரசிகர் ஒருவர் கை கொடுக்க உடனடியாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கின்றார். ஆனாலும் அந்த நேரத்தில் வினயை கட்டித் தழுவுகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் நித்யாமேனனின் நவீன தீண்டாமை இதுதானா? என இணைய வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
தொடாதேள்.. செத்த தள்ளி நில்லுடா அம்பி.. உடம்பு சரியல்லைன்னோ..
ஆனா பாருங்க அந்த உடம்பு சரியில்லாதது நடிகர்களை கட்டிப் பிடிக்குறப்போ, முத்தம் கொடுக்குறப்போ வராதா?
நித்யா மேனனின் நவீன தீண்டாமை pic.twitter.com/M5EQmbeNy5
Listen News!