• Sep 17 2026

திருமணம் பற்றிய ரம்யாவின் பார்வை இதுதானா.? வெளியான தகவல்களால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த திவ்யா ஸ்பந்தனா, தமிழில் ரம்யா என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நடிப்பைத் தாண்டி அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது வெளிப்படையாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருமணம் குறித்த தனது பார்வையை தற்போது தெளிவாக தெரிவித்துள்ளார்.

திருமணம் என்பது வாழ்க்கையின் கட்டாயமான அங்கம் அல்ல என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கூறியுள்ள ரம்யா, திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என தெரிவித்துள்ளார். ஒருவருடைய அடையாளத்தை திருமண நிலை மட்டுமே தீர்மானித்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது தான் மிகவும் முக்கியம் எனக் கூறியுள்ள அவர், நல்ல நட்பு, ஒரே மாதிரியான சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் ஆகியவை இருவருக்கிடையே இருந்தால் மட்டுமே திருமணம் சிறந்த முடிவாக அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு பொருத்தமான நபரை இதுவரை சந்திக்கவில்லை என்றும் ரம்யா வெளிப்படையாக கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. திருமணம் குறித்து பொதுவாக நிலவும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, தனக்கான வாழ்க்கைத் தேர்வை தெளிவாக வெளிப்படுத்தியுள்ள ரம்யாவின் இந்த அணுகுமுறைக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement