தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழும் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன், 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கான அறிமுக வீடியோவை இயக்குநர் நெல்சன் தனது தனித்துவமான ஸ்டைலில் உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
கமல்ஹாசனின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், பின்னர் மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, ஆடுபுலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இருவரும் சேருவது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது..

இந்த நிலையில், ரஜினிகாந்த் - கமலஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களும் ஒன்றிணைந்து நடிப்பதால் அவர்களின் சம்பளத்தை பொறுத்து படத்தின் பட்ஜெட் அமையும் என கூறப்படுகிறது.
Listen News!