• Apr 18 2026

தளபதி 68 படத்தின் உறுதியான டைட்டில் இது தானா?- தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுக்காததற்கு இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்‌ஷி சவுத்ரி மற்றும் வெங்கட் பிரபு டீம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்து இலங்கைக்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர். 


பாஸ் மற்றும் பஸல் என இரு டைட்டில்கள் முதலில் உலா வந்த நிலையில், அந்த இரு தலைப்புகளும் இல்லை என கெத்தாக அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி எல்லாம் ட்வீட் போட்டு வெங்கட் பிரபு பெருசா ஒன்றை கிண்டிக் கொண்டிருக்கிறார். சரியான நேரத்தில் சர்வ் செய்யப்படும் என்றார். 

ஆனால், உடனடியாக GOAT டைட்டிலை தான் வெங்கட் பிரபு வைத்திருக்கிறார் என்கிற தகவலும் லீக் ஆகி விட்டது. ஆனால், இதுவரை அதுதொடர்பான மறுப்பு அறிக்கை ஏதும் அர்ச்சனா கல்பாத்தி வெளியிடாத நிலையில், அந்த டைட்டில் தான் ஒரிஜினல் டைட்டில் என ரசிகர்கள் திட்டவட்டமாக நம்ப ஆரம்பித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement