• Dec 25 2024

விஜயின் ஓணம் வாழ்த்து... பூகம்பமாய் கிளம்பிய புது சர்ச்சை! இது என்னடா பிரச்சினை?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் முழுமனதாக விலகி மக்களுக்காக ரசியலில் ஈடுபடவுள்ளேன் என் நடிகர் விஜய் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. அதனையடுத்து கோட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை குஷிபடுத்தி இருந்தார். அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தின் அப்டேட்டும் நேற்று வெளியானது இந்நிலையில் தற்போது ஒரு செய்தி பரபரப்பாகி வருகிறது.   


தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான தளபதி விஜய் மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விடயமானது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அதாவது தற்போது வரையில் கட்ச்சியின் கொள்கையை அறிவிக்காத நிலையில் திமுக பாணியில் நடிகர் விஜய் நகர்கிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 


அதாவது சமீபத்தில் விநாயகர் சதுர்ச்சி வந்தது அதற்க்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை ஆனால் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் மாநாடு தொடர்பான அறிக்கை வெளியிடும் முன்னர் அவர் விருப்பத்தின் மத்தியில் இவ்வாறு செய்கிறார் என் இணையவாசிகள் கூறிவருகிறார்கள்.   




Advertisement

Advertisement