தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கிருஷ்ணன், 43 வயதிலும் தனது இளமை தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். பிஸியான படப்பிடிப்பு அட்டவணையிலும் அவர் எப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்ற கேள்விக்கு தற்போது அவரே பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார். அதில், Pilates Cadillac கருவியை பயன்படுத்தி, உடலை தொங்கவிட்டு மேலே இழுக்கும் கடினமான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த பயிற்சி வயிற்றுப் பகுதி, இடுப்பு, முதுகுத்தண்டு, தோள்பட்டை மற்றும் கைகளின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
மேலும், த்ரிஷா Hanging Leg Raises என்ற மற்றொரு சவாலான பயிற்சியையும் செய்து காட்டியுள்ளார். இதில், கம்பியில் தொங்கியபடி கால்களை மேலே தூக்குவதன் மூலம் வயிற்றுத் தசைகள், இடுப்பு தசைகள் மற்றும் உடல் சமநிலையை மேம்படுத்த முடியும். அதோடு கைகள் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பையும் இந்த பயிற்சி அதிகரிக்கிறது.
உடலின் பல தசைகளையும் ஒரே நேரத்தில் இயக்கும் இந்த வகை உடற்பயிற்சிகள், உடல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு முதுகுத்தண்டின் மீது ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக உடற்தகுதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் த்ரிஷாவின் இந்த பயிற்சி வீடியோக்கள், தகவல்கள் என்பன தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
Listen News!