• Dec 26 2024

ராயன் படத்தின் கதை இது தானா? வைரலாகி வரும் ஸ்டோரி என்ன தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ள நடிகர் தனுஷ், தற்போது தரமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் மில்லர்  திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பா. பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து தனுசு இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.கே சூர்யா, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளதோடு செல்வராகவனும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம்.


இந்த நிலையில், தற்போது தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

அதாவது, இந்த படத்தில் தனுஷின் குடும்பத்தை கொலை செய்து விடுகின்றார்கள். இதனால் தனுஷ் தன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தேடிச் செல்லும் போது  அங்கு ஒரு அண்டர் வேர்ல்டுக்குள் செல்ல, அதன் பின்  என்ன நடந்தது? தான் குடும்பத்தைக் கொன்றவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் தற்போது வைரலாக பரவப்பட்டு வரும் நிலையில், ராயன் படத்தின் கதை இதுதான் என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதும் சந்தேகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement