• Apr 17 2026

இந்த அசிங்கம் தேவையா விஜயா? மார்கெட்டிங்கில் மாஸ் காட்டும் மீனா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மீனா பூ கட்டிக் கொண்டு இருக்க, அண்ணாமலை எல்லாருக்கும் டீ போட்டு எடுத்து வருமாறு விஜயாவுக்கு சொல்ல, கோபத்துடன் போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

சீதா மாலை கட்டுவதை போட்டோ எடுத்து கொடுக்குமாறு அண்ணாமலையிடம் சொல்ல, அவர் மனோஜை அழைத்து போட்டோ பிடிக்க சொல்கிறார். அதற்கு ரோகிணியும் சலித்துக் கொள்கிறார்.

அதன்பின், பார்வதிக்கு போன் போட்டு வீட்ட வருமாறு விஜயா அழைக்க, அங்கு வந்த பார்வதியையும் பூ கட்ட வைக்கிறார் முத்து.


வீட்டுக்கு வந்த ஸ்ருதியும் ரவியும் ஒரே வாசமா இருக்கு என சொல்ல, விஜயா அவரை உள்ளே போய் இருக்குமாறு சொல்கிறார். ஆனாலும் அவர் இல்லை என மீனா பக்கத்தில் அமருகிறார். ரவி எல்லாருக்கும் சமைக்க தயாராக, சாமான் ஒன்றும் இல்லை என விஜயா சொல்லுகிறார்.

அதற்கு முத்து, மனோஜை அழைத்து கடைக்கு போய்ட்டு வருமாறு சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement