• Dec 26 2024

விஜய் டிவி அவசர அவசரமாக நிக்சனை காப்பாற்றியது இதற்கு தானா? முன்னாள் போட்டியாளர் ஆவேசம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில் இன்றைய தினம் அர்ச்சனாவும், நிக்சனும் காரசாரமாக வாக்குவாதம் செய்ய, அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி இப்போது கொலை மிரட்டல் விடும் அளவுக்கு சென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் விதமாக, நீ எல்லாம் ஒரு ஆளா, பேசாம உப்புமா சாப்பிட்டு ஒக்காந்து இரு, கெட்ட எண்ணம் உள்ள மனுஷங்க என திட்டியது மட்டுமில்லாமல் நாயே, சேரி, சொருகிடுவேன்னு கேவலமாக பேசி  சீறியுள்ளார்.


இந்த நிலையில், நிக்சனின் கேவலமான நடவடிக்கைகளை பார்த்து ஆவேசமாக பதிவொன்றை பகிர்ந்துள்ளார் முன்னாள் போட்டியாளரான சனம் ஷெட்டி. அதின்படி அவர் கூறுகையில், 

'பெண்களை பார்த்து போட்டுடுவேன், சொருகிடுவேன் என சொல்வது கேவலமான புத்தி என்றும் அதற்கு என்ன அர்த்தம்? பிரதீப் ஆண்டனிக்கு எதிராக ரெட் கார்டு தூக்கியது இந்த நிக்சன் தான். விவாதம் நடத்தலாம் வார்த்தைப் போர் நடத்தலாம். ஆனால், நிக்சன் இன்று பேசியது மன்னிக்க முடியாத ஒன்று. 


இந்த வாரமாவது கமல் சார் வினுஷா பிரச்சனை குறித்து கேள்வி கேட்பாரா? நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாரா? இல்லை இதற்காகத்தான் விஜய் டிவி அவசர அவசரமாக மிக்ஜாம் புயலை காரணம் காட்டி நிக்சனை காப்பாற்றியதா? என ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கி உள்ளார் சனம் ஷெட்டி.

 

Advertisement

Advertisement