• Dec 25 2024

இது உங்க அப்பன் வீடா..? ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா! ரணகளமான பிக் பாஸ் இல்லம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதன் பாதி நாட்களை கடந்துள்ளது. ஆனாலும் இந்த சீசனை ரசிகர்கள் சலிப்போடும் வெறுப்போடுமே பார்த்து வருகின்றார்கள்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எனினும் இதில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, ரியா, வர்ஷினி, சிவகுமார்  ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

d_i_a

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள்  கத்திக் குளறி கூச்சலிட்டு சண்டையிட்ட காட்சிகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்கின்படி ஏஞ்சல் டீம் ஒரு பக்கமும் டெவல்டிம் ஒரு பக்கமும் விளையாடி வருகின்றது. இதன் போது தர்ஷிகாவுக்கும்  ஜாக்குலினுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதன் போது ஜாக்குலின் சத்தமாக பேச அவரை அடக்கும் விதமாக தர்ஷிகா இன்னும் அதிகமாக கத்தி சண்டை போட்டதோடு இது உங்க அப்பன் வீடா? என்று பேசி உள்ளார். இதை கேட்ட ஜாக்குலின் மேலும் கடுப்பாகி கத்த இருவருக்கும் இடையே சண்டை நீளுகின்றது. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement