• Apr 17 2026

Watermelon வெளிய போக வினோத்தும் ஒரு காரணமா? ஆதிரை போட்டுடைத்த உண்மை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு  இன்று 59 ஆவது நாளில்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.  அதற்கு பிறகு ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி வெளியேற ,  நான்கு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்தனர். 

இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் எலிமினேட் ஆகி சென்ற ஆதிரை மீண்டும் உள்ளே வந்தார். இது எப்ஜே க்கும் வியானாவுக்கும் அதிர்ச்சியாக காணப்பட்டது. 

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஆதிரைக்கும் வினோத்துக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது .

அதாவது  வினோத் சபரியுடன் கதைத்துக் கொண்டிருக்க, அங்கு இருந்த ஆதிரை ஏய் கேட்கிற மாதிரி  கத்தாதே என்று சொல்ல,   உடனே வினோத் யாரை ஏய்.. என்று சொல்றா  என கேட்கின்றார்.


மேலும் ஏய் என்று சொல்லாத.. அது தப்பு என்று சொல்ல, நான் ஏய் என்று சொன்னேன், ஏய் வினோத் என்று சொல்லவில்லை என்று ஆதிரை சொல்லுகின்றார். மேலும் நாக்க கடித்துக்கொண்டு வராதே என்று வினோத்துக்கு ஆதிரை சொல்லுகின்றார்.

மேலும் வாட்டர் மெலன் இருந்தபோது இவர் நிறைய விஷயம் பண்ணினாரு, எல்லாம் பண்ணிட்டு பண்ணல பண்ணல என்று சொல்லுறாரு என்று ஆதிரை சத்தம் போடுகின்றார். 

மேலும் வாட்டர் மெலன் வெளியே போயிருக்கிறார் என்றால் அதற்கு வினோத்தும் ஒரு காரணம் தான்  என்று சொல்லுகின்றார். 

அந்த நேரத்தில் வினோத், நீ  எவ்வளவு பேரோட கேமை கேடுத்திட்டு இந்த வீட்டிலிருந்து போக வச்சிருக்கான்னு எனக்கு தெரியும் என்று வினோத்தும் பதிலுக்கு பேசுகின்றார்.  

Advertisement

Advertisement