• Jun 16 2026

பல ஆண்டுகள் உழைப்பு வீணாகவில்லை.. வாகை சந்திரசேகருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.!

shali / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் மூத்த குணச்சித்திர நடிகரும் அரசியல்வாதியுமான வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி சார்பில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கலைத்துறையினரிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள வாகை சந்திரசேகர், தனது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். திரைப்படங்களுடன் நாடக மேடைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும், ‘நண்பா நண்பா’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சங்கீத நாடக அகாடமி விருது, இந்தியாவின் இசை, நடனம், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்கான மிக உயரிய தேசிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகள், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பினை மேற்கொண்ட கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு வாகை சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது நீண்டகால கலைப்பணிக்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement