விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இது தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
கோபி ராதிகாவிடம் போக வேண்டாம் என்று சொல்லியும் ராதிகா முடிவில் உறுதியாக இருக்க சரி எந்த இடத்திலாவது இருக்கப் போற என்று சொல்லு என்று கேட்க ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறோம் என்று சொல்லி கிளம்பிவிடுகிறார் ராதிகா.
d_i_a"
மறுபக்கம் ஈஸ்வரி " ராதிகா சின்ன பொண்ணு வச்சிருக்கா வேலைக்கு போற உன்னை எப்படி பார்த்துக்க முடியும் 24 மணி நேரமும் கூட ஒரு ஆளு இருக்கணும் அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். அவ போனா போகட்டும் விடு என்று சொல்ல இனியா நாங்கல்லாம் உங்களுக்கு இருக்கோம் டாடி நீங்க கவலைப்படாதீங்க" என்று சொல்லுகிறார். உடனே பாக்யா "அவங்க போறேன்னு சொன்ன உடனே போகட்டும்னு விட்டுட்டீங்களா? அவங்க மனசு உடைஞ்சி இருக்காங்க இந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருக்கணும் இங்க வந்திருக்கக் கூடாது" என்று சொல்கிறார்.
பின்னர் பாக்கியா "இது மாதிரி உங்க பசங்க பண்ணா உங்களால பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா என்று கேட்கிறார். செழியன் ஜெனியையும் எழில் அமிர்தாவையும் சரியா பாத்துக்கலனா உங்களுக்கு எப்படி இருக்கும், இனியாவ கல்யாணம் பண்ணிக்க போறவன் இது மாதிரி பண்ணா பார்த்துகிட்டு சும்மா இருப்பீங்களா" என்று கேட்க கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். உடனே ஈஸ்வரி "அவ எதாவது பேசிகிட்டு இருப்பா நீ உள்ள வா என்று அழைக்க",உடனே கோபி ஈஸ்வரியிடம் "நான் ராதிகாவை பார்க்க போறேன்மா" என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ராதிகாவும் மயூவும் சோகமாக புதிய வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார்.மயூ ஓடி சென்று அவரை கட்டியணைத்து "ஏன் என்னை பார்க்க வரவில்லை நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுனேன் டேடி" என்று சொல்கிறார். கோபி மயூவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்க அப்போது ஈஸ்வரியிடம் இருந்து கால் வருகிறது. " அங்க போனா அம்மாவை மறந்துரு" என்று சொல்கிறார் அதைக்கேட்ட கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். அத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது.
Listen News!