• Dec 25 2024

பாக்கியா கொடுத்த செருப்படியில் பொத்திக்கொண்டு சென்ற ஈஸ்வரி! பலே..பலே..!!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கமலா ராதிகாவை போலீஸ் ஸ்டேஷன் போய் வரலாம் என்று கூப்பிடுகின்றார். ஆனாலும் தான் வரமாட்டேன். நான் தனியாகவே மயூவை வளர்த்துக் கொள்கின்றேன். கோபியுடன் இப்படி வாழ முடியாது என்று சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லாரும் சுற்றி வைத்து பாக்கியாவை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அம்மா செய்தது சரிதான் என்று எழில் சொல்லுகின்றார். மேலும் அந்த அயோக்கியன் அம்மாவை பட பூஜைக்கு வரவிடவில்லை என்று அவரும் திட்டித்திருக்கின்றார்.

ஆனாலும் ஈஸ்வரி நீ கோபி மீது கம்ப்ளைன்ட் கொடுக்க முதல் என்னுடன் கதைத்திருக்க வேண்டும் என்று கோபிக்கு ஆதரவாக பேசுகின்றார். இதை கேட்ட பாக்யா கோபத்தின் உச்சியில் அப்படி என்றால் ரெஸ்டாரன்ட் பிரச்சனையில் நான் ஜெயிலுக்கு போயிருந்தால் பரவாயில்லையா? என்னை அடிச்சி இருந்தால் பரவாயில்லையா? நான் வீட்டு மூலையில் ஒடுங்கி கிடந்தால் பரவாயில்லையா அவர் செய்வதற்கான தண்டனை நிச்சயம் அவருக்கு கிடைக்கத்தான் வேண்டும் என்று பதிலடி கொடுக்கிறார்.

d_i_a

இதனால் ஈஸ்வரி எதுவும் பேசாமல் ரூமுக்கு செல்லுகின்றார். செழிகளும் பாக்யா மீது கோபத்தில் மேலே செல்ல, இனியாவும் உன்னை பிடிக்கவே இல்லை என்று பாக்கியாவிடம் சொல்லிவிட்டு செல்கின்றார்.


மறுபக்கம் கோபி போலீஸ் ஸ்டேஷனில் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல, செப் வந்து நடந்த உண்மைகளை சொல்லுகின்றார். அதன் பின்பு கோபியின் நண்பர் வந்து இதுக்கு தான் அப்பவே சொன்னேன் என்று சொல்ல, செப்  தனது கழுத்தை அறுத்து விட்டதாக அவரிடம் சொல்லி புலம்புகின்றார் கோபி .

இறுதியாக தான் இந்த படத்தை வேண்டாம் என்று சொல்லப் போவதாக பாக்கியாவிடம் எழில் சொல்லுகின்றார் ஆனாலும் வேண்டாம் இதை பண்ணு இது உன்னுடைய கனவு என்று எழிலுக்கு தைரியம் கொடுகின்றார் பாக்கியா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement