• Dec 27 2024

பிரியங்கா மோகனின் அந்த 20 நிமிட காட்சிகள் மாயம்... 'டிக் டாக்' படக்குழு புகார்... குழப்பத்தில் ரசிகர்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பிறகு எதற்கும் துணிந்தவன். டான் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12ம் தேதி வெளியாக உள்ளது.


இந்நிலையில் 'டாக்டர்' படத்திற்கு முன்னதாக இவர் நடித்திருந்த 'டிக் டாக்' திரைப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. இந்த படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் படக்குழுவினர் பார்த்தனர். அதில் பிரியங்கா மோகன் நடித்திருந்த 20 நிமிட காட்சிகள் இடம்பெறாததால் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் அந்த காட்சிகள் மாயமாகி இருந்ததால் படக்குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.


இதையடுத்து கோர்ட்டில் வழக்குத் தொடர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இதுகுறித்து படத்தின் டைரக்டர் மதன் குமார் கூறும்போது. "டிக் டாக்" படத்தை கஷ்டப்பட்டு எடுத்து திரைக்கு கொண்டு வந்தோம். ஆனால் படம் ஓடியபோது பிரியங்கா மோகன் நடித்து இருந்த முக்கியமான 20 நிமிட காட்சிகள் இல்லாமல் மாயமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தொழில் நுட்ப கோளாறால் தவறு நேர்ந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் கூறினர். இதை ஏற்க முடியாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம்" என்றார். இந்த சர்ச்சை தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement