• Dec 26 2024

பாக்கியாவை விட்டு ராதிகாவின் பக்கம் சாய்ந்த ஈஸ்வரி ,செழியனை அடித்துத் துரத்திய ஜெனியின் அப்பா,கடும் கோபத்தில் கோபி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியல்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தாவும் பாக்கியாவும் கிச்சனில் நிக்கும் போது கணேஷ் போன் பண்ணி அமிர்தாகிட்ட விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று பாக்கியாவிடம் கேட்கின்றார். அப்போது பாக்கியா எப்பிடி சொல்லுவீங்க, நீங்க உங்க பிள்ளையை மட்டும் தானே யோசிப்பீங்க, நாளைக்கு வந்து நானே உங்க அமிர்தாகிட்ட சொல்லி அவளை என்னோடு கூட்டிட்டு வரப்போகின்றேன் என்கின்றார் இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகின்றார்.


தொடர்ந்து,ஜெனி வீட்டுக்கு வரும் செழியனை, ஜெனியின் அப்பா ஜெனியைப் பார்க்க முடியாது இங்க இருந்து போ எனத் துரத்துகின்றார். வெளியில் செழியனின் குரல் கேட்கின்றது என ஜெனி வெளியில் வர முயற்சிக்க அவரது அம்மா ஜெனியை உள்ளே விட்டு கதவை மூடிட்டு போகின்றார்.

அத்தோடு ஜெனியின் அப்பா செழியனுக்கு அடிக்க வர எழில் தடுத்ததோடு, விவாகரத்து என்பது ஜெனியும் செழியனும் முடிவு செய்ய வேண்டியது நீங்க எதுக்கு நடுவில வாறீங்க, செழியன் ஜெனிகிட்ட தான் பேச வந்தான். அவனை பேச விடுங்க என்றதும் ஜெனியின் ரூம் கதவின் அருகே நின்று செழியன் ஜெனியை தன்னுடன் வரச் சொல்லி கெஞ்சுகின்றார்.


ஆனால் ஜெனி எதுவும் சொல்லாமல் இருப்பதால், அவருடைய அப்பா செழியனையும் எழிலையும் வீட்டை விட்டுப் போகுமாறு துரத்துகின்றார். பின்னர் வீட்டுக்கு வந்ததும் செழியனும் எழிலும் கோபி கூட பேசிட்டு இருக்கின்றனர். அப்போது எழில் ஜெனியை அடைச்சு வைச்சிருக்கிறாங்க. அவங்க அப்பா அம்மா தான் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியிருக்கிறாங்க என்று  அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்கின்றார். இதைக் கேட்டு கோபி கோபப்படுகின்றார்.

பின்னர் பாக்கியா வந்து ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் சாப்பிடாமல் இருக்கிறாங்க வாங்க சாப்பிட என்று சொல்ல, பாக்கியாவைக் கண்டதும் செழியன் சொல்லி அழுகின்றார். பின்னர் கோபி செழியனைச் சமாதானப்படுத்துகின்றார்.தொடர்ந்து இரவு துாங்கிட்டு இருக்கும் போது, ஈஸ்வரி விம்மி விம்மி அழுது கொண்டிருக்கின்றார்.


இதைப் பார்த்த ராதிகா ஈஸ்வரியிடம் என்னாச்சு என்று கேட்க ஈஸ்வரி,ஜெனி நல்ல பொண்ணு அவ இப்பிடிப் பண்ணுவா என்று நினைக்கல என்று கவலைப்பட ராதிகா ஜெனி இதைப் பண்ணி இருக்கமாட்டா அவ இந்த வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுவா நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்லி ஆறுதல் படுத் ஈஸ்வரி ராதிகாவின் தோளில் சாய்ந்து அழுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement