• Dec 26 2024

கதவு திறந்ததும் மாயா செய்த காரியம்- கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்- மிரண்டு போன ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, 80 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் நடந்த நிலையில், ஹவுஸ் மேட்ஸ் சண்டை போடுவதை மறந்து... சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

மேலும் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி விக்ரம் வெளியேறியிருந்தார்.அவர் மாயா உடன் கடந்த ஒரு வாரமாக மோதலில் இருந்த நிலையில், எலிமினேஷனுக்கு பிறகும் மாயா அவரிடம் பேசவே இல்லை. 


இறுதியில் விக்ரம் எல்லோரிடமும் பேசிகொண்டிருக்கும் நிலையில் மாயா ஒதுங்கியே இருந்தார்.விக்ரம் வெளியில் போக கதவு திறந்தபோது மாயா வெளியில் எட்டிப்பார்த்து அங்கிருந்தவர்களுடன் பேச முயற்சித்தார்.


அதை பார்த்த பிக் பாஸ் அவரை எச்சரித்தார். மீண்டும் இப்படி செய்யாதீங்க எனவும் அவர் எச்சரித்தார். இதனால் மற்ற ஹவுஸ்மேட்ஸும் கடும் குழப்பத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement