• Dec 25 2024

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, இப்பிடித் தான் இருப்பேன்- ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இதில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகளும் கலந்து கொண்டு சிறப்பிதது வருகின்றார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரதீப் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் வனிதா.தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள வனிதா விஜயகுமார், “ இன்றைய காலகட்டத்தில் நமக்கு நடந்தது குறித்து வெளியே சொல்ல வேண்டும், அப்போது தான் அதைப்பார்த்து யாராவது ஒருவர் திருந்துவார்.


மனரீதியாக பெண்களுக்கு ஆண்களை விட பலம் இருந்தாலும் உடல் ரீதியான பலம் குறைவு.அதுவும் பிரபலமாக இருந்தால் முகம் மிக முக்கியது, இந்த முகத்தை வெளியே காட்டக்கூடாது என்பதற்காக மட்டுமே இப்படி செய்துள்ளார்கள்.


அந்த நபர் என் அருகில் வந்து, ரெட் கார்டு. அதுல நீ சப்போர்டா என கூறியதும் மட்டும் காதில் விழுந்தது.என்னை அடித்ததும் கைகள் நடுங்கிவிட்டது, அப்படியே மயங்கிவிட்டேன். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்னர் தான் வீட்டிற்கு வந்தேன் என்றார். தொடர்ந்து கண்ணில் அடிபட்ட புகைப்படத்துடன் பிரபல சேனல் ஒன்றில் தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.


அதனால் பலரும் வனிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் வனிதா தற்பொழுது தன்னுடைய கேயர் ஸ்டைல் லுக்கை மாற்றியிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டோஸ் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement