• Dec 25 2024

மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது! அனைவருக்கும் நன்றி! சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்ட கடிதம்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரையும் நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்த திரைப்படம் தான் அமரன்.இந்த படம் முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், அப் படத்தை  உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் தயாரித்துள்ளார்.


இந்த படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ராணுவ உயர் அதிகாரியாகவும், சிங்கம் போல் கர்ஜிக்கும் தோரணையை உடையவராகவும் மிரட்டுகிறார்.அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.


இந்நிலையில் டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்களின் அமோகமான வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக தனது இன்ஸராகிரேம் பக்கத்தில் ரசிகர்களின் ஆதரவிற்கும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். 

இதோ அந்த பதிவு...


Advertisement

Advertisement