• Dec 26 2024

இவர்களால்தான் சினிமா தளர்ச்சி கண்டது! பா ரஞ்சித் ஒதுக்கப்படவேண்டியவர்கள்! அட்டாக் பதில் அளித்த வெற்றிமாறன்

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் பல இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கினாலும் ஒரு சில இயக்குனர்களின் திரைப்படங்கள் வித்தியாசமானது , அவ்வாறே மிகவும் அருமையான எளிய மக்களுக்கு உதவும் வகையிலான கதைகளை கொண்ட திரைப்படங்களை  எடுக்க கூடியவர்கள் உள்ளனர்.


அவ்வாறு சாதிய வன்கொடுமையையும் , எளிய மக்களை ஒடுக்குவதையும் சமூகத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் திரைப்படம் எடுக்க  கூடிய முன்னணி இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர். இவர்களை பற்றி சமீபத்தில் பிரவீன் காந்தி  விமர்சித்திருந்தார்.


அவர் கூறுகையில் " வெற்றிமாறன் , பா ரஞ்சித் என இரண்டு இயக்குனர்கள் உள்ளனர் அவர்கள் சினிமாவில் வளர்ச்சி கண்டதும் சினிமா தளர்ச்சி கண்டு விட்டது. இவர்களை போன்று சாதியை மையப்படுத்தும் இயக்குனர்கள் சினிமாவில்  ஒதுக்கப்பட வேண்டியவர்கள்" என கூறியுள்ளார்.இதை பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றில் இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்ட போது " இந்தியாவில் இன்னமும் சாதிய வன்கொடுமைகள் , ஒடுக்குமுறைகள் இல்லை என ஒருவர் கூறுகின்றார் என்றால் இல்லை எனக்கு தெரியவில்லை அவர் எந்த இடத்தில வாழுகின்றார் என்று " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement