• Dec 25 2024

கோவணத்துல இருக்கணும்னு கட்டாயம் இருந்துச்சு- தங்கலான் குறித்து ஓபனாகப் பேசிய விக்ரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் பேசியதாவது, நான் கே.ஜி.எஃப் இடத்திற்கு போய் அங்கேயே தான் ஷுட்டிங் நடந்தது.இரவானால் சரியான குளிராக இருக்கும். பாம்பு ,தேள் எல்லாம் அங்கே நிறைய கிடக்கும்.


அங்கே வாழுறவங்க எப்பிடி இருப்பாங்களோ, அப்பிடித் தான் நாங்களும் வாழ்ந்தோம். காலில் செருப்பில்லாமல் கோவணம் கட்டி நடித்தேன். கோமணம் கட்ட வேண்டும் என்பதற்காக தான் வெயிட் போடாமல் உடம்பை பார்த்துகிட்டேன். இந்த படத்தில் நடித்தது எப்பவும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement