• Jan 27 2025

"என்னது மொட்டை ராஜேந்திரனா.." சவுண்டை கலாய்த்த நபர்..பதிலடி கொடுத்த ஜாக்குலின்..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 இல் மிகவும் அழகிய நட்பினை வளர்த்து கொண்ட சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் வெளியிலும் அதனை வளர்த்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் ரயானின் படத்தினை பார்வையிட சென்றுள்ளனர்.பெரும்பாலான பிக்போஸ் நண்பர்கள் டீமாக சென்றுள்ளனர்.


படம் பார்த்து வெளியில் வரும்போது அனைவரிடமும் படம் குறித்து review கேட்கப்பட்டது.அனைவரும் ஊடகவியலாருக்கு பதில் சொல்லும் போது நபர் ஒருவர் சவுந்தர்யாவினை பார்த்து மொட்டை ராஜேந்திரனின் voice எப்புடி ஆனது எனக்கேட்டதற்கு சவுந்தர்யா ஷாக் ஆகி என்னது மொட்டை ராஜேந்திரனா..? என கேட்டுள்ளார்.


அதற்கு ஜாக்குலின் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.அதாவது "தல நல்லா இருக்கு தல voice பாட்டு பாடி காமிக்கிறீங்களா நீங்க "என மிகவும் கோபமாக பேசியுள்ளார்.சவுந்தர்யா தனது குரல் தொடர்பில் மிகவும் uncomfortable ஆக இருப்பதாகவும் பிக்போஸ் நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.


இருப்பினும் அதையெல்லாம் உடைத்து வெற்றியாளராக இருந்து அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் சவுந்தர்யாவின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement