• Oct 05 2025

அழகில் சமந்தாவுக்கே டப் கொடுப்பாங்க போலயே.. சேலை லுக்கில் இளசுகள் மனதைக் கவர்ந்த ஜனனி.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சு மற்றும் அழகால் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி. அதன் பிறகு தமிழ்த் திரைப்பட உலகிலும் தனது கால் பதித்த நடிகையான இவர், தற்போது புதிய போட்டோஷூட்டில் கவர்ச்சியும், அழகும் நிரம்பிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை குலுக்கியுள்ளார்.


இந்த போட்டோஷூட்டில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பட்டு சாறியில், ஜுவெல்லரி மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலில் மிளிருகின்றார் ஜனனி. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி, ரசிகர்களிடையே கமெண்ட்ஸ் மழை உருவாகியுள்ளது.


ஜனனியின் பிரபலமான பயணம், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 மூலம் தான் ஆரம்பமாகியது. அந்த நிகழ்ச்சியில் அவர் காட்டிய நேர்மை மற்றும் உணர்ச்சி பூர்வமான செயல்கள், அவரை மக்கள் மத்தியில் நட்புடைய ஒரு பெண் பிரபலமாக மாற்றியது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, ஜனனி தளபதி விஜய் நடித்த “லியோ” படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றி, அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது.


அதன்பின், சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற “உசுரே” திரைப்படத்தில், ஜனனி கதாநாயகியாக நடித்தார். இந்த படம் பாசம், காதல் மற்றும் தற்காலிக வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் பற்றிய தாக அமைந்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது வெளியான போட்டோஸ் இதோ..!!



Advertisement

Advertisement