• Apr 19 2026

கோலிவுட் வரலாற்றில் முத்திரை பதித்த 'ஜனநாயகன்'.. ஷூட்டிங் முடிய முன்பே இத்தனை கோடி வசூலா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69 வது படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார் . மேலும் இதில் வில்லனாக பாபி தியோல் நடிக்கின்றார்.

ஜன நாயகன் படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

d_i_a

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் எனும் முடியாத நிலையில் வசூல் வேட்டை நடத்தி உள்ளது. அதன்படி இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.


அந்த வகையில் ஜனநாயகன்படத்தில் ஓவர்சீஸ் ரைட் மற்றும் சுமார் 75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்படவில்லை. 

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் 53 கோடிகளுக்கு விற்பனை ஆனது. ஆனால் இது அதைவிட கூடுதல் மடங்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement