• Aug 03 2026

வசூலில் புதிய சாதனை படைக்கும் ஜனநாயகன்.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் விஜய், தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக, அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்னரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது.

இருப்பினும், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு பெருமளவில் திரண்டு சென்று படத்தை கொண்டாடினர். தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளியான முதல் நாளிலேயே ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ.295.92 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.204.92 கோடியும், வெளிநாடுகளில் ரூ.91 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ரூ.300 கோடி வசூல் இலக்கை நெருங்கியுள்ள ‘ஜனநாயகன்’, தொடர்ந்து வரவேற்பை பெற்றால் ரூ.500 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’, வசூல் ரீதியாக எந்த அளவிற்கு புதிய சாதனைகளை படைக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement