• Dec 26 2024

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப்பா? திடீரென 3 படங்களில் ஒப்பந்தமானதால் பரபரப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இந்த படத்தின் அடுத்த கட்ட நகர்வு இன்னும் இல்லை என்றும் குறிப்பாக இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க யாரும் முன் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு அனுபவம் இல்லை என்பதால் அவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் தயங்குவதாகவும் விஜய் சேதுபதி, துருவ் விக்ரம், சிவகார்த்திகேயன், கவின் உள்பட பலர் இதையே காரணம் சொன்னதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் ஹீரோ கிடைக்காத பட்சத்தில் அவரே இந்த படத்தில் நடிக்க திட்டமிட்டதாகவும் ஆனால் லைக்கா நிறுவனம் இந்த படத்தை சில வருடங்கள் தள்ளிப் போடுவோம், அதற்கு முன் நீங்கள் ஒரு நல்ல இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும் இதனை அடுத்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜேசன் சஞ்சய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மூன்று படங்களில் நடித்த பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமான பின், தனது நடிப்புத்திறமையை உறுதி செய்த பின், அவர் இயக்குனராக மாறுவார் என்றும் அதன் பின்னர் அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒரு சில ஹீரோக்கள் முன்வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு செய்தி சமூக வலைதளத்தில் பரவி வந்தாலும் இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் 3 படங்களில் நடிப்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement