• Dec 27 2024

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படம் டிராப்பா? ஹீரோ கிடைக்காததால் சிக்கல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ஒரு ஸ்டெப் கூட நகரவில்லை என்றும் குறிப்பாக ஜேசன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய்க்கு 21 வயது தான் ஆகிறது என்றும், எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை என்றும், அப்படி இருக்கும்போது அவரது இயக்கத்தில் எப்படி நடிப்பது என்று இரண்டாம் கட்ட ஹீரோக்கள் கூட தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

முதலில் விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ், சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதைப்போல் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக நடிப்பதற்காகவும் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவரும் இந்த படத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.



ஒரு சில குறும்படங்கள் இயக்கி, முன்னணி இயக்குனரிடம் உதவியாளராக இருந்து அனுபவம் பெற்று, அதன் பின் படம் இயக்க வந்திருக்கலாம் என்று,ம் தற்போது யாரும் நடிக்க  வரவில்லை என்பதால் விஜய் தான் நடிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் விடாமுயற்சியாக ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தின் ஹீரோவை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருப்பதை பார்த்து லைக்கா நிறுவனம் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்கள் கழித்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால் படம் டிராப்பாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement