• Jun 10 2026

ரொமாண்டிக் பாயாக ஊஞ்சலில் ஜெயம் ரவி.. கூடவே ரொமான்ஸ் பண்ணும் நடிகை யாரு? வெளியான க்ளிம்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் தான் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி.

இவர் தற்போது ஜெயம்ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து கிளிப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக உள்ளது.


இந்தப் பாடலுக்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனை கேட்டதுமே ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றார்கள்.

1964ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. அந்தப் படம் இப்போ ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். அந்தளவுக்கு காமெடி. படம் தற்போது அந்தப் படத்தின் பெயரை காப்பாற்றுவாரா கிருத்திகா உதயநிதி என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement