• Dec 25 2024

சமரச பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை..!ஜெயம் ரவி-ஆர்த்தி வழக்கு ஒத்திவைப்பு..

Mathumitha / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, இன்று சென்னை நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கின் கீழ் ஆஜராகினர்.இருவரின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, விவாகரத்து தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது நடிகர் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் கடந்த சில மாதங்களாகவே தனித்தனியாக வாழ்ந்து வருவகின்றனர்.


2009 ஆம் ஆண்டில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் இரு ஆண் பிள்ளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று இவர்கள் இருவரும் சமரச பேச்சு வார்த்தைக்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏறத்தாள ஒரு மணித்தியால சமரச பேச்சு எட்டிடப்படாமையின் காரணத்தினால்  நீதிமன்றம் குறித்த வழக்கினை வருகின்ற டிசம்பர் 7 ஆம் திகதி ஒத்தி வைத்துள்ளது.

Advertisement

Advertisement