• Dec 25 2024

வெளியானது ஜெயம் ரவியின் "காதலிக்க நேரமில்லை" First Single Promo...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிகை நித்தியா மெனன் நடிப்பில் நடிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாக விருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் தற்போது இன்னுமொரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


நடிகர் ஜெயம் ரவி கடைசியாக பிரதர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 31ம் திகதி தீபாவளி முன்னிட்டு வெளியாகி இருந்தது. அந்த திரைப்படத்துடன்  லக்கி பாஸ்கர், அமரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகவே படம் கொஞ்சம் வசூலில் அடிவாங்கியது.


d_i_a

இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில்  "காதலிக்க நேரமில்லை" படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் பெஸ்ட் சிங்கள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அத்தோடு நாளை பாடல் ப்ரோமோ வெளியாக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement