• Dec 26 2024

ஐஷுவின் முகத்திரையை கிழிக்க ஜீவா போடும் ஸ்கெச்! கலெக்டருக்கு ஆப்பு வைத்த காவியா! இன்றைய எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சீரியலில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இத் தொடரின் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளிவந்து இருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.

இதுவரையில், ஐஷுவை வந்து பார்த்த டாக்டர் 'நீங்க பாட்டி ஆகிட்டீங்க' என ஐஸ்வர்யாவின் அம்மாவிடம் சொல்ல எல்லாரும் ஷாக் ஆகி நிற்கின்றனர். 

இதை தொடந்து, ஜீவாவும் பிரியாவும் உண்மையை கண்டுபிடிக்க திட்டம் போடுகின்றனர். ஐஷுவ பத்தின உண்மைய எல்லாருக்கும் சொல்லணும், அதுக்கு ஆதாரத்த ரெடி பண்ணனும் என பேசிக் கொள்கிறார்கள்.


மறுபக்கம், காவியாவுக்கு இடைஞ்சலாக இருக்கும் கலெக்டர் பத்தி கார் டிரைவரிடம் பார்த்தி பேசுகிறார்.அதன்படி அவர் பழிவாங்கினா காவியா தாங்க மாட்டா, நியாமா தானே அவ வேல பாப்பா என சொல்ல, ஏற்கனவே அவர் காவியாவ தூக்க பிளான் பண்ணிட்டு இருக்கார் என பார்த்தியிடம் சொல்ல, அவரிடமே காவியாவை காப்பாற்ற உதவி கேட்கிறார் பார்த்தி. அவரும் சரி என சொல்கிறார்.


மறுப்பக்கம், காவியாவை லஞ்ச ஊழலில் மாட்டி விட சதி செய்கிறார் கலெக்டர். அதன்படி நபர் ஒருவரை வரவைத்து அவரிடம் பணத்தை கொடுத்து பைலில் மறைத்து காவியாவிடம் கொடுக்குமாறு சொல்கிறார்.அவரும்  காவியாவை மாட்டி விட பணம் இருக்கும் பைல்லை காவியாவிடம் கொடுத்து விட்டு வெளியே இருக்கிறார்.


இதை தொடர்ந்து, காவியா ஆபிஸ்க்கு போன உயர் அதிகாரிகள் அங்கு லஞ்சம் வாங்கியது யார் என தேடுகின்றனர். காவியா ரூம்க்கு போய் தேடவும் அங்கு எதுவும் இல்லை என அடுத்து கலெக்டர் ரூமில் செக் பண்ண முறையாக மாட்டிக் கொள்கிறார். அதன்பின் அவரை கைது செய்து கொண்டு செல்கின்றனர். அதன்படி, பார்த்தி சொல்ல தான் காவியா அந்த பைல்லை மாற்றி வைத்து உள்ளார்.அவர்கள் பிளான் பண்ணியது போலவே கலெக்டரை வசமாக மாட்டி விடுகின்றனர்.

இன்னொரு பக்கம், ஐஷு விஷயத்தை கண்டுபிடிக்க பிரியாவும் ஜீவாவும் செல்கின்றனர். அதன்படி ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி நிற்கின்றனர். அங்கு பிரியாவுக்கு கவிதை சொல்கிறார் ஜீவா..இதுதான் இன்றைய எபிசோட்..


Advertisement

Advertisement