• Apr 18 2026

செழியனை அடித்து துவைத்து தெருவில் வீசிய ஜோசெப்! அவமானப்பட்ட கோபி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், வீட்டுக்கு வந்த கோபி இந்த மனுஷனுக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது என சொல்ல, யாருக்கு என ராமமூர்த்தி கேட்கிறார்.

அதற்கு, அந்த ஜோசப்புக்கு தான், ஜெனிக்கு மாப்பிள்ளை தேடுறேன் என மூஞ்சி மேல அடிக்கிற மாதிரியே சொல்லுறாரு என்று கோபி சொல்ல, செழியன் உடனடியாக பைக்கை எடுத்துக்  கொண்டு ஜெனியின் வீட்டுக்கு செல்கிறார்.


அங்கு நேரே ஜெனியிடம் சென்று, இங்கே என்ன நடக்குது? என கேட்க, அங்கு வந்த ஜெனியின் அப்பா அவரை கன்னத்தில் அறைந்து வெளியே தள்ளுகிறார். அவரை ஜெனி தடுத்தபோதும் நிறுத்தாமல் அடித்து விரட்டி வெளியே தள்ளி விடுகிறார்.

ஆனால் செழியன், எனக்கு என் குடும்பம் வேணும் என கதவில் இருந்து அழுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.


Advertisement

Advertisement