• Dec 26 2024

பின்விளைவை யோசிச்சி கருத்து சொல்லுங்க... டைம் கேட்ட மன்சூர் அலிகான்.. அறிவுரை வழங்கிய நீதிபதி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

மான நஷ்ட்ட ஈடு வழக்கு அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் கால அவகாசம் கேட்டதனால் நிதிமன்றமம் காலஅவகாசம் வழங்கியுள்ளது. 


மன்சூர் அலிகான் நடிககை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்திருந்தால் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். காணொளியை முழுமையாக பார்க்காமல் தன்னை கொச்சப்படுத்தியதாகவும், அவமான படுத்தியதாகவும் தெரிவித்து மன்சூர்அலிகான் நடிகை திரிஷா, குஷ்பூ,சிரஞ்சீவி மீது மனநஷ்ட்ட வழக்கு பதிவு செய்து மனுதாக்கல் செய்திருந்தார்.


இந்த விடையத்தை விசாரித்த உயர் நீதிமன்றம் விளம்பர நோக்கத்திலும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் மன்சூர் நடந்துகொண்டதாக கூறி அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


அந்த உத்தரவின் படி வழங்கப்பட்ட காலவகாசம் முடியவே இன்று நிதிமன்றத்தில் ஆஜரான மன்சூர் அலிகான் நஷ்ட்ட ஈடு கட்டுவதற்கு தனக்கு மேலும் கால அவகாசம் கேட்ட நிலையில் நீதிவான் அவர்களினால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement