• Apr 18 2026

விஜய்யை விளாசிய ஜூலி! ஒரு உயிர் போயிருக்கு.. உங்களுக்கு அரசியல் முக்கியமா?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சமீபத்தில் வேலூரில் நிகழ்த்திய பேச்சு அரசியல் மற்றும் ரசிகர் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் பேச்சைத் தொடர்ந்து, நடிகையும் சின்னத்திரை பிரபலமுமான ஜூலி தனது Instagram பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக, தவெக ஆதரவாளர்கள் ஜூலியையும் அவரது குடும்பத்தினரையும் விமர்சித்ததாக கூறப்படுகிறது.


இதற்கிடையில், தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் விக்னேஷ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற அவர், சாலை ஓரமாக நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் மோதியதில் கடுமையாக காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், ஜூலி வெளியிட்ட வீடியோவில், “ஒரு மாணவர் உயிரிழந்திருக்கிறார். இதை அரசியல் பேச வேண்டாம் என்றாலும் மனது சம்மதிக்கவில்லை. உங்களை பார்க்க வந்தவரின் உயிர் போனது பெற்றோருக்கே பெரிய இழப்பு. நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து செல்கிறீர்கள்; ஆனால் அந்த குடும்பத்தின் துயரத்தை யாராலும் நிரப்ப முடியாது.” என்று அவர் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பு கூறிய தனது கருத்துகளை மீண்டும் வலியுறுத்திய ஜூலி, ஆதரவாளர்கள் தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement