• Dec 26 2024

இத நினைச்சா மட்டும் சந்தோசமா இருக்கு.! மாயாவை பாராட்டிய கமல்! வைரலாகும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், ரசிகர்களின் மனதில் இருக்கும் ஏராளமான கேள்விகளை போட்டியாளர்களிடம் கேட்டு அதற்கான தீர்வை வழங்கி வருகிறார் உலக நாயகன்.

இந்த வாரம்  கேப்டனாக இருந்த மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் போன்றவர்களிடம் மிகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.


இந்த நிலையில், இந்த நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்ச்சியில், மாயா, பூர்ணிமா, ஜோவிகாவை வைத்து வறுத்தெடுத்து விட்டார் கமல்.

அதன்படி, பிரதீப் விவகாரத்தில் உரிமைக்குரல் எழுப்ப தான் துணிந்ததாக மாயா கூறுகிறார். அதற்கு நீங்க குற்றம் சாட்டும் போது ஏன் உரிமைக்குரல் எழுப்ப இல்ல..நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்ம தானே.. நான் உங்க கூட சேர்ந்து விளையாடல.. நான் பிளேயர் இல்ல. என் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கல.. என்று மாயாவை விளாசி தள்ளிவிட்டார் கமல்.

எனினும், எதுக்கு எடுத்தாலும் கமல் சார்..கமல் சார்.. என்று சொல்லுறீங்க.ஆனா இது மட்டும் சந்தோசமா இருக்கு..என்னா சார் போட்டு கூப்பிடுறீங்க..என்று மேலும் கூறியுள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



 


  

Advertisement

Advertisement