• Apr 07 2026

இந்த வயதிலும் இப்படியா?- ஜிம்மில் கடினமான வொர்க்அவுட் செய்யும் ஜோதிகா.. வைரலான வீடியோ

shali / 2 days ago

Advertisement

Listen News!

நடிகையும், சூர்யா அவர்களின் மனைவியுமான ஜோதிகா தனது நடிப்பு பயணத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு பாலிவுட்டில் தொடர்ந்து பல வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், தனது கணவரான சூர்யாவையும் அந்த துறையில் கவனம் செலுத்த ஊக்குவித்து வருகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.


இந்நிலையில், ஜோதிகா தனது உடல்நலத்திலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். குறிப்பாக, தினமும் ஜிம்முக்கு சென்று ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதை தனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளார். அவ்வப்போது தனது வொர்க்அவுட் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஊக்குவித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பல கடினமான உடற்பயிற்சிகளை எளிதாக செய்து காட்டுகிறார். 47 வயதிலும் அவரது உடல் உறுதி, சுறுசுறுப்பு மற்றும் அழகு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “இந்த வயதிலும் இப்படியா ஃபிட்னஸ்?” என்று பாராட்டுகளுடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். மொத்தத்தில், ஜோதிகாவின் இந்த முயற்சி பலருக்கும் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement