• Dec 25 2024

திடீரென காணாமல் போன பிரபல நடிகர்கள் ... எல்லா நடிகர்களையும் கடத்திட்டு போய்ட்டாங்க ...ரகசியத்தை போட்டு உடைத்த கே. பாக்யராஜ்

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

சுமார் 45 ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர்  மற்றும் திரைக்கதை ஆசிரியர் ,நடிகர் என பெயர் பெற்றவர் கே . பாக்யராஜ் . 

சினிமாவில் ஏராளமான காதல் கதைகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்த பாக்யராஜ்,இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் முகம் காட்டியவர் .

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது,  “ இந்திய சினிமா நடிகர்களை கடத்தி சென்று விட்டனர், என்றும் அதன்பின்னர் நடந்த சம்பவம் குறித்தும் கருத்து வெளியிட்டார், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 


"எல்லா நடிகர்களுக்கும் டூப் கொடுத்தார்கள் . நாட்டில் எங்கயோ மூலையில்  இருக்கும்   ஒரு கிராமத்தில் தமிழ் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. அந்த கிராமத்தில் நிறைய விழாக்கள் , தமிழ் பண்டிகைகள் வரும் போது  ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று யோசித்தார்கள், அவர்களின் வசதிக்கு நடிகர்களை அங்கு அழைக்க முடியாது, அதனால் அப்போது நடிகர்கள் எல்லோருக்கும் டூப் இருப்பார்கள் அவர்களை கூப்பிட்டால் மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து நிகழ்வுக்கு டூப் நடிகர்களை அழைத்தார்கள் .

ஆனால் நிகழ்வு ஒழுங்கமைப்பில் ஒரு தவறை விட்டுவிட்டார்கள், அதாவது   எல்லா நடிகர்களும் உண்மையாவே வருகிறார்கள் என்ற  அறிவித்தல் ஒன்றை கொடுத்து   விட்டார்கள் . 

இந்தவிடயத்தை அங்குள்ள நபர் ஒருவர் தீவிரவாதிக்கு அறிவித்துவிட்டார். 


தமிழ் நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் , உலகநாயகன் , தளபதி எல்லோரும் வருகிறார்கள் . அந்தக் குழுவை அப்படியே கடத்தினால் நாங்க எவ்வளவு காசு கேட்டாலும் கிடைக்கும் , என கூறிவிட்டான். 

பின்னர் அந்த நடிகர் குழுவை அப்பிடியே அள்ளி கொண்டு போய் விட்டார்கள் . நடிகர்களுக்கு தங்களை கடத்தி கொண்டு வந்தது கூட தெரியாது . 

நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லும் போது தான் ,  எங்களை கடத்தி கொண்டு  வந்து இருக்கிறார்கள் என்று நடிகர்கள் அறிந்து கொண்டனர் . இது ஒரு கதை, இப்பிடி பேசும் போது எனக்கு நிறையை இவ்வாறான ஞாபகங்கள் வருகிறது . " என இந்த  ஒரு காமெடியான  ரகசியத்தை கூறி அரங்கை சிரிப்புக்குட்படுத்தினார்.

Advertisement

Advertisement