• Dec 26 2024

அப்பாவுடன் இருக்கும் போதே என்னை கதறி அழ வைத்தார்..! பிரபல இயக்குநர் பற்றி காஜல்...

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகையாக திகழும் காஜல் அகர்வால், நடிகர் பரத் நடித்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்பு அவர் நடித்த மாவீரன்  என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. அந்தப் படத்திற்காக இவருக்கு ஃபிலிம்பேர் விருதும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களோடு போட்டி போட்டு நடித்து வந்தார். இவர் நடித்த படங்களில் விவேகம், மாரி, ஆல் இன் ஆல் அழகுராஜா, துப்பாக்கி, மாற்றான், நான் மகான் அல்ல, மெர்சல் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது முதல் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால், தன்னை முதன் முதலில் தெலுங்கில் தேஜா இயக்கிய லட்சுமி கல்யாணம் படத்தில் நடிப்பதற்காக அழைத்தார் என கூறியுள்ளார்.


ஆனாலும் எனக்கு தெலுங்கு தெரியாது. அதனால் எப்படி நடிக்க சொல்வார்கள் என்று கேள்வி எனக்குள் இருந்தது. இதனால் பதட்டத்தோடு இருந்தேன். என்னுடன் அப்பாவும் இருந்தார். அப்போது இயக்குனர் என்னை அழுது காட்டுமாறு சொன்னார். 

ஆனால் எப்படி அழுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அப்போது என்னுடைய அப்பா ஒரு வார்த்தை சொல்ல உடனே அழ தொடங்கி விட்டேன். அதை பார்த்த இயக்குனர் நீ ரொம்ப அழகாக அழுகிறாய் என்று சொல்லி முதல் பட வாய்ப்பை எனக்கு கொடுத்தார் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement