• Apr 10 2025

மறைந்த தபேலா கலைஞருடன் கலஹாசன்! உருக்கமாய் வெளியிட்ட இரங்கல் பதிவு!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் இவரின் மறைவை குறித்து நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


73 வயதான ஜாகிர் உசேன் இதய கோளாறு காரணமாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில வாரங்களாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலே இன்று இவர் உயிரிழந்துள்ளார். 

அந்த ஆளுக்கு அறிவில்லையா? விடுதலை-2 வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா...


இவரின் மறைவை குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன்  ஜாகிர் உசேன்னுடன் தபேலா வாசிப்பது போல இருக்கும் புகைப்படத்தினை போஸ்ட் செய்து "ஜாகிர் பாய் நமக்குக் கொடுத்த காலங்களுக்காகவும், அவருடைய கலையின் வடிவத்தில் அவர் விட்டுச் சென்றதற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். குட்பை மற்றும் நன்றி", என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு.


Advertisement

Advertisement