• Dec 25 2024

’இந்தியன் 2’ தோல்வியை முன்கூட்டியே கணித்த கமல்-அனிருத்.. சொன்னது யாரிடம் தெரியுமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் குறைகள் எல்லாம் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த குறைகள் எல்லாம் முன்கூட்டியே கமல்ஹாசன் கணித்து லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.  

’இந்தியன் 2’ படத்தை பொருத்தவரை மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது படத்தின் நீளம் தான். மூன்று மணி நேரம் படம் இருக்கிறது என்றும் சில காட்சிகள் மிகவும் நீளமாக இருக்கிறது என்றும் அந்த காட்சிகளை குறைத்தால் மட்டுமே படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் டப்பிங் செய்யும் போது கணித்து விட்டார்.

ஆனால் இதை அவர் ஷங்கரிடம் சொல்லாமல் லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சொல்லி இருக்கிறார். அதேபோல் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது அனிருத் இந்த படம் நீளமாக இருப்பதை கண்டுபிடித்து அவரும் லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட்  நிறுவனத்திடம் சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி சில டெக்னீஷியன்கள், எடிட்டர் உட்பட பலரும் இந்த படத்தை பார்த்து படத்தின் நீளத்தை குறைக்க சொல்லிய நிலையில் ஒருவர் கூட இதை ஷங்கரிடம் நேரடியாக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஷங்கரிடம் சொல்லி இருந்தாலும் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் சொல்லவில்லையா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி விமர்சகர்களும் பொதுமக்களும் படத்தின் நீளம் குறித்து சொன்ன பிறகு தான் நீளத்தை குறைக்க ஷங்கர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை படத்தின் ரிலீஸுக்கு முன்பே செய்திருந்தால் படம் ஓரளவு வெற்றி பெற்று இருக்கும் என்றும் இனிமேல் நீளத்தை குறைத்து எந்த பயனும் இல்லை என்றும் படக்குழுவினர்களே கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement