• Dec 26 2024

அந்த நடிகருக்கு இருக்கும் தைரியம் கமலுக்கு இல்லை- கழுவி ஊற்றும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.மிக்ஜாம் புயலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த வார எலிமினேஷன் நடக்கவில்லை. 

70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சீசன் மக்கள் மத்தியில் கமல் ஹாசனுக்கு அதிக எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது, மாயா கேங்-க்கு சப்போர்ட்டாக பேசுவது போன்ற விஷயங்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை என தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பெண்கள் குறித்து தவறாக பேசிய நிக்சனை கூட கமல் கண்டிக்கவில்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர் ஒருவர் பெண் போட்டியாளரை பார்த்து தவறாக பேசியுள்ளார்.இதனால் கடுப்பான நாகர்ஜுனா அந்த ஆன் போட்டியாளரை செமையாக வெச்சு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து இது போல் செய்ய கமல் ஹாசனுக்கு தைரியம் இல்லை என தமிழ் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement