சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் கமருதீன். இவர் மகாநதி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு பின்னர் பிக் பாஸ் சீசன் 9-இல் போட்டியாளராக கலந்து கொண்டு, பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
அந்த சீசனில் கானா வினோத் உடன் இணைந்து அவர் செய்த சேட்டைகள், அலப்பறைகள் மற்றும் நகைச்சுவைகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இறுதி வரை பைனலிஸ்ட் ஆக முன்னேறுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக, கார் டாஸ்க் போது ஏற்பட்ட மோதல் காரணமாக கமருதீனும் பார்வதியும் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இவர்களுக்கு ரசிகர் ஆதரவு குறையவில்லை. பின்னர் பைனல் மேடையில் அவர்கள் சமாதானமாகி இருந்த காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது.

பிக் பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு, கமருதீன் பார்வதியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், இருவரும் இணைந்து புதிய கார் வாங்கிய வீடியோவையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், பார்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் கமருதீன் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருவதுடன், பலரும் பார்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்களுடன் வெளியே வந்த பார்வதி, இறுதியாக விஜய் சேதுபதி நடித்த காட்டான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!